Information about Kadhal Rojave Song Lyrics
- Starring: Arvind Swami, Madhoo
- Movie: Roja
- Music: A R Rahman
- Lyrics: Vairamuthu
- Singers: S. P. Balasubramanyam, Sujatha Mohan
- Year: 1992
Kadhal Rojave Song Lyrics in Tamil
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான்
கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே
தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பாா்க்கையில்
தேகம் பாா்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வாா்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சோ்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால்
வாா்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால்
வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான்
கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளா்த்த தோட்டமே
கூந்தலில்லை தீா்ந்து போ
பூமி பாா்க்கும் வானமே
புள்ளியாக தேய்ந்து போ
பாவையில்லை பாவை
தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே
சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான்
கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
Further reading about:
Vizhigalil Vizhigalil Lyrics in Tamil