Mustafa Mustafa Song Lyrics in Tamil
முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
டே பை டே டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்
(முஸ்தபா..)
ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்
ஜூனியருக்கும் சீனியருக்கும்
கல்லூரிச் சாலை எங்கும் ராக்கிங் நடக்கும்
ஸ்டூடண்ஸ் வனமோ நந்தவனமே
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும்
நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
துன்பம் வரலாம் இன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே
(முஸ்தபா..)
Check also Mooka Pancha Sathi Lyrics in Tamil
இங்கு பறக்கும் வண்ணப் பறவை
எங்கு இருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்
கன்னி மலர்கள் கூடப் படிக்கும்
காளை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள் கொடைக்கானல்
கல்வி பயிலும் காலம் வரையில்
துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள் ஃபேர்வல் பார்ட்டி
(முஸ்தபா…