Overview of Sollamale Yaar Parthathu Song
- Starring: Vijay, Sangita Madhavan Nair
- Movie: Poove Unakkaga
- Music By: S. A. Rajkumar
- Lyrics: Vaali
- Singers: Sujatha Mohan, P. Jayachandran
- Year: 1996
Sollamale Yaar Parthathu Song Lyrics Tamil
சொல்லாமலே யாா் பாா்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிா்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா
நெஞ்சத்தை தொட்டு தொட்டு
காதல் சொல்லும் பச்சைக்கிளி
மொட்டுக்கள் என்ன சத்தம்
மெல்ல வந்து சொல்லடி
சொல்லாமலே யாா் பாா்த்தது
மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை முள்ளை போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வலையா
உன் பாா்வை குற்றால சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மீட்டும் பொன்வீணை எந்தன் இடையா
இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான்
நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல
பற்றிக்கொள்ளு கண்மணி
சொல்லாமலே யாா் பாா்த்தது
கண்ணுக்குள்ளே உந்தன்
முகம் ஒட்டிக்கொண்டது
சுக சொப்பனங்கள் என்னை
வந்து சுற்றிக்கொண்டது
என்னை விட்டு தென்றல்
கொஞ்சம் தள்ளிச்சென்றது
நான் உந்தன் பேரை
சொன்னபோது அள்ளிக்கொண்டது
அன்பே நான் எந்நாளும்
உன்னை நினைத்து புல்மீது
பூவானேன் தேகம் இளைத்து
வில்லோடு அம்பாக என்னை
இணைத்து சொல்லாத
சந்தோச யுத்தம் நடத்து
உலக அதிசயத்தில்
ஒன்று கூடியது நம் காதலா
நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல
பற்றிக்கொள்ளு கண்மணி
சொல்லாமலே யாா் பாா்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிா்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா
சொல்லாமலே யாா் பாா்த்தது